அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தாமரை தடாகத்தில் ஒரு சமாதான மாநாட்டை நடத்தவிருப்பதாகவும் அதற்கு 70 இலட்சம் ரூபா செலவிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியான நிலையில் அதுகுறித்து எத்தகைய இறுதி தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஜம்மியத்துல் உலமாவின் ஒரு சமாதான மாநாட்டை நடாத்தவுள்ளது. இன நல்லிணக்கத்தை அடிப்படையாக கொண்டும், ஒரு சமாதான பிரகடனத்தை வெளியிடும் நல்ல நோக்கிலேயே இந்த மாநாட்டை நடாத்தவுள்ளது. இதில் பலர் கலந்துகொள்வார்கள்.
கடந்த ஜம்மியத்துல் உலமாவின் நிறைவேற்றுக்கூட்டத்தில் இதுபற்றி ஆராயப்பட்டது. இந்த மாநாட்டிற்குரிய இடம், அதற்கான வசதிகள் பற்றியும் பேசினோம். பலரும் பல இடங்களை பிரேரித்தனர். எனினும் தாமரை தடாகத்தில்தான் இந்த மாநாட்டை நடத்த வேண்டும், அல்லது அதற்காக 70 இலட்சம் ரூபாய்களை செலவிட வேண்டும் என்பன பற்றியெல்லாம் நாம் எத்தகைய இறுதித் தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை.
ஜம்மியத்துல் உலமா சபையானது இஸ்லாமிய அடிப்படையில், நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து, இலங்கை முஸ்லிம்களுக்காக தொடர்ந்து பணியாற்றும் எனவும் அவர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment