Sunday, August 24, 2014

துருக்கியின் புதிய பிரதமராக அகமது டவுடோக்லு நியமனம்





துருக்கியின் புதிய பிரதமராக வெளியுறவு அமைச்சர் அகமது டவுடோக்லு நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய பிரதமர் தயீப் எர்டோகன் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.



இதையடுத்து அவர் டவுடோக்லுவை பிரதமராக தேர்வு செய்து அறிவித்துள்ளார். கடந்த 2003ம் ஆண்டில் இருந்து 2009ம் ஆண்டு வரை எர்டோகனின் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment