Monday, August 25, 2014

நீரின்றி கஷ்டப்படும்போது, ஜஸ் பக்கட் சவாலானது விரயமானது - ஐ.தே.க.



இலங்கையில் பிரபல்யம் அடைந்து வரும் ஜஸ் பக்கட் சவால் நடவடிக்கையை ஐக்கிய தேசியக்கட்சி கண்டித்துள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளார்.



ஆயிரக்கணக்கானோர் நீரின்றி கஷ்டப்படும் போது ஜஸ் பக்கட் சவாலானது, நீரை விரயம் செய்கிறதென புத்திக பத்திரன குறிப்பிட்டுள்ளார்.



மக்கள் மத்தியில் இந்த நடவடிக்கை, வைரஸ் போன்று பரவியுள்ள நிலையில் அரசாங்கம் அமைதியாக இருப்பது குறித்து பத்திரன ஆச்சரியம் வெளியிட்டுள்ளார்.


No comments:

Post a Comment