Sunday, August 24, 2014

ISIS அமைப்பில் பெல்ஜியம் நாட்டவர்



ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில், 13 வயது சிறுவன் இணைந்துள்ள தகவலை, அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.



ஈராக் மற்றும் சிரியாவில், பல நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த, ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பு, அவற்றை இணைத்து, தனி இஸ்லாமிய நாடாக அறிவித்து உள்ளது.



இந்நிலையில், இந்த அமைப்பில், பெல்ஜியத்தை சேர்ந்த, யூனுஸ் என்ற, 13 வயது சிறுவன் இணைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பின் இளம் வயது போராளியாக, கைகளில் துப்பாக்கியை ஏந்தியபடி உள்ள யூனுசின் புகைப்படத்தை, அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில், ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில், அப்துல் ஹமீத், 27 என்ற தன் சகோதரனுடன், யூனுஸ் இணைந்துள்ளான். இவர்களின் தந்தை ஒரு வியாபாரி. இவர்கள், மொராக்கோ நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள்.


No comments:

Post a Comment