வீசா பிரச்சினை காரணமாக எட்டு இலங்கையர்கள் சவுதி அரேபியாவின் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த எட்டு இலங்கையர்களும் சவுதி அரேபியாவின் ஜெட்டா விமாநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலைவாய்ப்பிற்காக சவுதிக்கு சென்ற சிலரே நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொரளையிலுள்ள தனியார் தொழில் முகவர் நிலையம் ஒன்றின் ஊடாக அவர்கள் சவுதிக்கு சென்றுள்ளனர்.
கொழும்பு, வரக்காபொல மற்றும் அளுத்கம பகுதிகளைச் சேர்நதவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment