Wednesday, September 10, 2014

சஜித் பிரேமதாஸ மீது தனிப்பட்ட கோபம் இல்லை, ஆனால் கொள்கையில் முரண்பாடுகிறேன் - மங்கள சமரவீர



களுத்துறையில் சங்கிலி திருடியவர் இன்று அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.



கொழும்பில் 10-09-2014 இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே மங்கள இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,



ராஜபக்ஷ தலைமையின் கீழ் ஒரு நாட்டுக்குள் இரண்டு உலகம் உருவாகியுள்ளது. எனவே தற்போதைய காலத்திற்கு “ஒரே நாடு இரண்டு உலகம் என்ற கோஷமே பொருத்தமானதாகும்.



ராஜபக்ஷவின் தலைமை உறவுகள், நண்பர்கள், அடியாட்கள் போன்றோர் முதலாம் உலகத்தை பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர். இவர்கள் கொழும்பில் இரவு வேளைகளில் வீதிகளை மூடி லெம்போகினி வர்க்க கார்களில் ஓட்ட பந்தயம் செல்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.



இரண்டாம் உலகத்தில் வாழ்வோர் தமது பாரம்பரிய இடங்களில் இருந்து விரட்டியடிக்கப்படுகின்றனர்.



இவர்கள் அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாது கஸ்டப்படுவதாகவும் பெற்றோர் பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் குடும்பத்துடன் ஆறு அல்லது கடலில் சென்று விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் நிலை காணப்படகின்றனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.



மேலும், 1997ஆம் ஆண்டு பிரதேச சபைக்குத் தெரிவான நபர் இன்று கோடீஸ்வரனாக உள்ளதாகவும் மங்கள தெரிவித்துள்ளார்.



இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோர் மீது தனக்கு தனிப்பட்ட கோபம் கிடையாது என்றும் ஆனால் அவர்களது கொள்கையில் முரண்பாடு காணப்படுவதாகவும் இதன்போது மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.




No comments:

Post a Comment