ஊவா மாகாணசபை தேர்தலில் சாதகமான முடிவுகள் கிடைக்கும் பட்சத்தில் ஐக்கிய தேசிய கட்சி ,ஜே.வி.பி ஆகியவற்றுடன் சேர்ந்து ஆட்சியமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகட்சி தலைவருமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாங்கள் வேறுவேறு கொள்கைகள் அடிப்படையில் தேர்தலில் போட்டியிடலாம் எனினும் எமது பொதுவான இலக்கு என்பது ராஜபக்ச அரசாங்கத்தை தோற்கடிப்பதே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பண்டாரவளையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது போது விடுதலைப் புலிகளால் தாக்குதலுக்குள்ளான பொன்சோகவின் கார் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதல் இடம்பெற்ற பகுதியின் மாதிரிதோற்றமும் உருவாக்கப்பட்டு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment