Saturday, September 13, 2014

திறன்மிக்க ஆசிய நாடுகளின் பட்டியலில் இலங்கை



திறன்மிக்க ஆசிய நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்கியுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.



நாட்டின் பொதுமக்கள் தொடர்பிலான பொருளாதாரம் மற்றும் புதிய கொள்கைகள் என்பவற்றை அடிப்படையாக கொண்டு இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இது குறித்து நேற்று வெளியிடப்பட்ட சுட்டெண்படி ஆசிய நாடுகளிலும் உலகளாவிய ரீதியிலும் ஜப்பான் முதலிடம் பெற்றுள்ளது.



மக்களுக்கான பொருளாதாரம், அறிவு பூர்வமான பொருளாதார அறிவு உட்பட்ட 36 விடயங்கள் இந்த சுட்டெண்ணுக்கு ஆதாரமாக எடுக்கப்பட்டுள்ளன.



உலகளாவிய ரீதியில் பின்லாந்து இரண்டாம் இடத்தையும் அமெரிக்கா நான்காம் இடத்தையும் பெற்றுள்ள.



தென்கொரியா, மூன்றாம் இடத்தையும் சீனா 11 வது இடத்தையும் பெற்றுள்ளன. இலங்கைக்கு 19வது இடத்தையும் இந்தியா 14வது இடத்தையும் பெற்றுள்ளன.


No comments:

Post a Comment