-TM-
கிளிநொச்சி பாரதி வித்தியாலயத்தில் கருங்குளவிகளின் தாக்கத்தால் அப்பாடசாலை இன்று வெள்ளிக்கிழமை (05) மூடப்படடதாக வித்தியாலய அதிபர் தெரிவித்தார்.
மேற்படி, பாடசாலையிலுள்ள கருங்குளவி கூடொன்று காற்றில் கலைந்து மாணவர்களை கொட்டியதில் மூன்று மாணவர்களும் ஆசிரியர் ஒருவரும் பாதிக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (05) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் எதிரொலியாகவே பாடசாலை மூடப்பட்டுள்ளதாக அதிபர் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment