சீனாவின் அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று இலங்கைக்கு வந்து சென்றுள்ளதாக வெளியான தகவல்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 15ம் திகதி மாலை கொழும்பு துறைமுக சீ.ஐ.சீ.டி இறங்குதுறைக்கு குறித்த நீர்மூழ்கிக் கப்பல் வந்து சென்றுள்ளது.
இது சீனாவின் வடக்கு கடற்பிராந்தியத்தைச் சேர்ந்த சென் செங்க்-02 ரகத்தைச் சேர்ந்தது என்று தெரிகின்றது.
இந்த நீர்மூழ்கிக் கப்பல் நீருக்கடியிலிருந்து கப்பல்களைத் தாக்கும் அணுஆயுத ஏவுகணைகளையும், நவீன தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது.
செய்மதித் தொடர்பாடல் வசதிகள் மற்றும் டோபிடோ பாதுகாப்பு பொறிமுறைகளும் இந்த நீர்மூழ்கிக் கப்பலில் நிறுவப்பட்டுள்ளது.
சீன ஜனாதிபதி ஷி ஜின் பென்னின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு இந் நீர்மூழ்கிக் கப்பலின் வருகை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இதன் வருகை தொடர்பில் இலங்கை கடற்படையினர் அறிந்திருக்கவில்லை என்றும் குறித்த தகவல்களிலிருந்து தெரிய வருகின்றது.
இலங்கை அரசாங்கம் இந்த நீர்மூழ்கிக் கப்பலின் வருகைக்கு உத்தியோகபூர்வ அனுமதியை அளித்திருக்கும் பட்சத்தில், அது பாரிய தவறாகும் என்று இராஜதந்திர மட்டத்தில் பரபரப்பாக பேசப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment