அழகான பெண்களை பார்த்த ரசிப்பதுண்டு என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சிங்கள சஞ்சிகையொன்றுக்கு அளித்த நேர் காணல் ஒன்றில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அழகான பெண்களை பார்த்தால் ரசிப்பதுண்டு. எனினும் அதனை மனதில் ஆழமாக போட்டுக் குழப்பிக்கொள்வதில்லை. உங்களுக்கு தோன்றும் உணர்வுகள் எனக்கும் உருவாகும். காமம், ஆசை, இச்சை போன்ற உணர்வுகள் எனக்கும் ஏற்படுவதுண்டு ஏனெனில் நானும் மனிதனே.
எனினும் ஒரு விடயத்தில் மனதை ஒருநிலைப்படுத்துவதன் மூலம், இவ்வாறான இச்சைகளை கட்டுப்படுத்த முடிகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் பெண் ஒருவரை நெருங்கவோ, காதலிக்கவோ சந்தர்ப்பம் கிடையாது. இந்த உணர்வுகள் எல்லாம் செத்துப் போய்விட்டன.
ஒருபோதும் மது அருந்தியதோ, புகைப்பிடித்ததோ கிடையாது.
துறவறம் பூண்டதன் பின்னர் என்னைப் பல பெண்கள் காதலித்திருக்கின்றார்கள். இது ஓர் சாதாரண விடயமாகும். இவ்வாறான நிலைமைகளின் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து பௌத்த மதத்தில் போதிக்கப்பட்டுள்ளது.
2004ம் ஆண்டில் யுவதியொருவர் என்னை தொடர்ச்சியாக பின் தொடர்ந்தார். பின்னர் அவர் என்னை காதலிக்கின்றார் என்பதை உணர்ந்தேன்.
பெண்களை எனது சகோதரி, தாய், மகள் போல நினைத்துக்கொள்ளுமாறு புத்தர் போதித்துள்ளார். துறவறம் பூணுவதற்கு முன்னதாக பெண்கள் பின்னால் சுற்றித் திரிந்திருக்கின்றேன்.
12, 13 வயது முதல் இவ்வாறு யுவதிகளின் காதலை பெற்றுக் கொள்ள முயற்சித்திருக்கின்றேன். பௌத்த பிக்குவாக மாறியதன் பின்னர் இந்த உணர்வுகள் தண்ணீரில் கரைந்து போய்விட்டது.
பாடசாலை காலத்தில் நான் கலை இலக்கிய துறைகளில் சிறந்து விளங்கினேன். இதனால் ஒரு காதலி இருந்தார் என சொல்ல முடியாது. பலர் என்னை நேசித்தார்கள்.
அரசாங்கத்தில் எனக்கு பிடித்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க. பிடிக்காதவர்கள் டிலான், ராஜித, வாசுதேவ நாணயக்கார ஆகியோராகும். ஜே.வி.பி.யில் அனுரகுமார திஸாநாயக்கவை பிடிக்கும்.
இறைச்சி, மீன் சாப்பிடுவேன், புத்த பிரான் எந்த இறைச்சி சாப்பிடலாம் எதனைச் சாப்பிடக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
வாசனைத் திரவியங்களுக்கு போட்டுக்கொள்ள எனக்கு அலாதிப் பிரியம் உண்டு.
அரசாங்கம் எமக்கு ஆதரவளிப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment