ஈரான் உயர்மட்டத் தலைவர் ஆயதுல்லாஹ் அலி கமைனி புரோஸ்டேட் அறுவைச் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வருவதாக ஈரானிலிருந்து செய்தி வெளியா கியுள்ளது.
தலைநகர் டெஹ்ரானில் இருக்கும் அரச மருத்துவ மனையில் ஆயதுல்லாஹ் கமைனி நேற்று திங்கட்கிழமை அறுவைச் சிகிச்சை செய்துகொண்டுள்ளது. எனினும் இது வொரு வழமையான சிகிச்சை என்று குறிப்பிடப்பட்டுள் ளது. இந்த அறுவைச் சிகிச்சைக்கான மருத்துவ நிலைமை குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
75 வயது மதத் தலைவரான ஆயதுல்லாஹ் கமைனி 1989 ஆம் ஆண்டு தொடக்கம் ஈரானின் மத மற்றும் அரசியலில் உயர் அதிகாரம் கொண்டவராக செயற்பட்டு வருகிறார். இவரது முடிவே நாட்டில் இறுதியானதாகும்.
முன்னதாக நேற்று தொலைக்காட்சியில் தோன்றிய ஆயதுல்லாஹ் கமைனி தமக்காக பிரார்த்திக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் கவலையளிக்கும் வகையில் எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆயதுல்லாஹ் கமைனி தனிப்பட்ட வாழ்வு போன்று அவரது சுகாதார நிலையும் ஈரானில் அதிக இரகசியத்திற்கு உரியதாக பேணப்பட்டு வருகிறது. எனினும் 2007 ஆம் ஆண்டு சுகவீனம் காரணமாக பொது நிகழ்வுகளில் பங்கேற்கா ததை அடுத்து அவர் மரணித்து விட்டதாக வந்தி கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
No comments:
Post a Comment