Friday, September 5, 2014

ISIS க்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்த ஈரான் - அயதுல்லா கமேனி பச்சைக்கொடி...!



ஈராக்கின் வடபிராந்தியத்தில் ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து போரிடுவதற்கு ஈரான் அங்கீகாரம் வழங்கியுள்ளது.



இராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா ஈராக் மற்றும் குர்திஷ் படையினருக்கு ஒத்துழைக்குமாறு தமது உயர்மட்ட கட்டளைத் தளபதிகளுக்கு ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா கமேனி அதிகாரம் அளித்துள்ளார்.



ஈராக்கில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு பாரம்பரியமாக ஈரான் எதிர்ப்பையே வெளியிட்ட வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.



எனினும் அமெரிக்காவின் உதவியுடன் ஈரானுக்கு ஆதரவான சியா படையினர் மற்றும் குர்திஷ் படையினர்

ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து சின்ஜியார் பிராந்தியத்திலுள்ள அமெர்லி நகரை கைப்பற்றியிருந்தனர்.


No comments:

Post a Comment