சிரியாவின் இத்லிப் நகரில் இஸ்லாமிய போராளிகளின் உயர்மட்ட இரகசிய சந்திப்பொன்றில் இடம்பெ ற்ற குண்டுத் தாக்குதலில் நாட்டின் பலம்வாய்ந்த கிளர்ச்சிக் குழுக்களின் தலைவர் மற்றும் பல கட்டளைத் தளபதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் பலம்வாய்ந்த இஸ்லாமிய கிளர்ச்சிக் குழுவான அஹ்ரார் அல் 'hம் படையணியின் தலைவர் ஹஸன் அப்புத் உட்பட 45 பேர் கொல்லப் பட்டுள்ளனர். வெடி பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பகுதிக்கு அருகில் இருக்கும் நிலத்தடி பதுங்குகுழியில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போதே குண்டு வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது.
இத்லிப்பில் இடம்பெற்ற இந்தசந்திப்பில் அஹ்ரார் கிளர்ச்சிக் குழுவுடன் இஸ்லாமிய போராளிகளின் கூட்டணியில் இணைந்திருக்கும் மேலும் பல படையணிகளின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றுள்ளனர். இதில் அஹ்ரார், அப்துல்லாஹ் அஸ்ஸாம் மற்றும் இமான் படையணிகள் இஸ்லாமிய தேசம் ISIS கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான யுத்த தந்திரம் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தமது குழு விசாரணைகளை முன்னெடுத்து வருவ தாக அஹ்ராரின் அரசியல் பிரிவு உறுப்பினர் அபு+ அல் முஸ்தபா அல் அம்ப்ஸி, அல் ஜஸீரா தொலைக் காட்சிக்கு குறிப்பிட்டுள்ளார். "இந்த சந்திப்பின்போது ஊடுருவல் இடம் பெற்றிப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. குண்டுவெடிப்பு பதுங்கு குழிக்குள்ளேயே இடம்பெற்றிருக்கிறது" என்று விபரித்த அவர், "பதுங்கு குழி இரகசிய இடத்தில் இருப்பதால் சிலவேளை அதற்குள் குண்டு பொருத்திவைக்கப்பட்டிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது" என்றார்.
இந்த தாக்குதலை யார் நடத்தினார்கள் என்பது இன்னும் உறுதிசெய்ய ப்படாதபோதும் ஐ.எஸ். எனப்படும் இஸ்லாமிய தேசம் ஆதரவாளர்கள் இதற்கு சமூக தளங்களில் பாராட்டு வெளியிட்டுள்ளனர். அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லாடன் மற்றும் ஐமன் அல் சவா ஹிரியுடன் நெருங்கிய தொடர்புகொண்டிருந்த அஹ்ரார் படையணியின் மற்றொரு தலைவரான அபு+ கலீல் அல் சூரி இஸ்லாமிய தேசம் கிளர்ச்சியாளர்களால் இவ்வாண்டு ஆரம்பத்தில் கொல்லப்பட்டார்.
இஸ்லாமிய தேசம் குழுவுக்கு எதிராக இவ்வாண்டு ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட இஸ்லாமிய போராளிகளின் கூட்டணியின் பிரதான படை யான அஹ்ரார் படையணியில் சுமார் 20,000 போராளிகள் உள்ளனர். இஸ்லாமிய தேசம் கிளர்ச்சியாளர்களின் செயற்பாட்டை எதிர்க்கும் அஹ் ராரின் ஆதரவாளர்கள், பெண்கள் உரிமை, மத மற்றும் இன சிறுபான் யினரை பாதுகாக்கும் இஸ்லாமிய கோட்பாட்டை வலியுறுத்துகின்றனர்.
கொல்லப்பட்ட ஹஸன் அப்பு+த் கடந்த ஜுனில் பி.பி.சிக்கு அளித்த பேட்டியில், ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களை கண்டித்த அவர், அந்த அமைப்பு எப்போதும் இல்லாதவகையில் இஸ்லாத்தை மோசமாக உலகுக்கு காட்டியது என்று சாடினார். ஐ.எஸ். போன்றல்லாமல் அஹ்ரார் அல் 'hம் வெளியாருக்கு விசுவாசமாக இருக்காமல் அஸாத் அரசு வெளியேற்ற ப்படும்வரை சிரியாவில் மாத்திரம் போராடுவோம் என்றும் குறிப்பிட்டார்.
சிரியாவில் இஸ்லாமிய தேசம் கிளர்ச்சியாளர்களின் எழுச்சியை அடுத்து அஹ்ரார் போராளிகள் சிரியாவின் அசாத் அரசுடன் மாத்திரமன்றி ஏனைய கிளர்ச்சியாளர்களுடனும்; போராடவே ண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
No comments:
Post a Comment