எகிப்திய அதிபர் அப்தல் ஃபதா அல் சிசியுடன் கெர்ரி கெய்ரோவில் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்கப்படுகிறது.
அரபு லீக் அமைப்பின் தலைவர் நபில் அல் அரபியையும் அவர் சந்திப்பார் என்று கருதப்படுகிறது.
கெர்ரியின் முயற்சிகளுகு அரபு நாடுகளிடம் பெரிய உற்சாகமான பதில் வந்திருக்கவில்லை என்று ஊடகங்களில் வெளியான தகவல்களை கெர்ரி வெள்ளியன்று மறுத்திருந்தார்.
துருக்கியில் இருந்தப்படி கருத்து வெளியிட்டிருந்த ஜான் கெர்ரி, சௌதி அரேபியாவிடமிருந்தும் வேறு சில நாடுகளிடம் இருந்தும் கிடைத்த பதில் தனக்கு மிகுந்த திருப்தியைத் தந்தது என்று கூறியிருந்தார்.
இஸ்லாமிய தேசம் எதிரான இராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்காவுக்கு உதவ பத்து அரபு நாடுகள் சம்மதித்துள்ளன.
ஆனால் முஸ்லிம் நாடாக இருந்தாலும் துருக்கி இந்த நடவடிக்கைகளில் பங்கேற்க இதுவரையில் சம்மதம் தெரிவித்திருக்கவில்லை.
No comments:
Post a Comment