Wednesday, February 19, 2020

தற்போதைய நாடாளுமன்றத்தின், இறுதி அமர்வு இன்று

தற்போதைய நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெறும் அமர்வே இறுதி அமர்வு என, சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய தனது டுவிட்டர் வலைதளத்தில் வெளியிட்டுள்ள தகவலில்,

“தற்போதைய நாடாளுமன்றத்திற்கு 41/2 வருடம் பூர்த்தியடைவதற்கு முன்னரான இறுதிக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இக்காலத்தில் ஜனநாயகம் பலப்படுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், எதிர்காலப் நாடாளுமன்றங்கள், குழுக்கள் மூலம் வெளிக் கொணரப்பட்ட விடயங்களின் தொடர்பில் பக்கச் சார்பின்றி செயற்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment