இன்று 2020/02/18 இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவர் அலெய்னா பி டெப்னிடஸ் அவர்ளுடனான சந்திப்பு பொன்று புத்தள ஆர். டீ. எப் நிறுவனத்தின் காரியாலயத்தில் பிற்பகல் இரண்டு மணியளவில் சுமார் ஒருமணி நேரமளவு இடம்பெற்றது. இதன்போது ஆயூதமுனையில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களின் யாதார்த்தமான நிலைமையையும் இன்றைய சமகாலத்தில் எதிர் நோக்கும் பிரச்சினைகளும் சவால்களும் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டது. இதன் போது புத்தள வாழ் யாழ் கிளிநொச்சி வெளியேற்றப்பட்ட சிவில் சம்மேளனம் சார்பாக தலைவர் அப்துல் மலிக் மௌலவி, செயளாலர் ஹஸன் பைறூஸ் ஆசிரியர், வெளிக்கள இணைப்பாளர் பதுருதீன் நிலாம் ஆகியோரும் மன்னார் மாவட்டம் சார்பாக ஏனைய முக்கிய பிரதிநிதிகளும் தத்தமது பிரதேசங்களை பிரதிநிதிப்படுத்தி சமகால நிலைப்பாடுகளை முன்வைத்தார்கள். மேலும் யூ .என்.ஓ வினால் முன்வைக்கப்பட்ட நிலைமாற்றலு்க்கான நீதி ,உண்மை, மீழ்நிகழாமை, இழப்பீடுகள் போன்றவற்றை மையப்படுத்தி எமது நிலைமைகளின் வகிபாகத்தயைும் கொண்ட ஆவணத்யைும், மீழ்குடியேற்றத்தின் தடைகளையும் அவற்றை நிவர்த்திக்க ஏதுவான சமாந்தர கட்டமைப்பு தேவையினையும் உள்ளடங்களாகவும் சமகால இருப்புடன் கூடிய தேவைப்பாடுகளையும் உள்ளடக்கிய ஆவணப்படுத்தல்களுடன் மனு கையளிக்கப்பட்டது . புத்தள வாழ் யாழ் கிளிநொச்சி வெளியேற்றப்பட்ட சிவில் சம்மேளனம்.



No comments:
Post a Comment