Monday, February 17, 2020

நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கே மீண்டும் ​போட்டியிடுகிறேன்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்பதற்காகவே தான் மீண்டும் பொதுத் ​தேர்தலில் போட்டியிடுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

பொலன்னறுவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தான் 26 வருடங்கள் பாராளுமன்றத்திலும் 5 வருடங்கள் ஜனாதிபதியாகவும் கடமையாற்றி எதிர்வரும் காலத்தை நிம்மதியாக வாழ தீர்மானித்தாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் கட்சியின் உறுப்பினர் மீண்டும் தேர்தலில் களமிறங்குமாறு வேண்டி கொண்டதன் அடிப்படையில் அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment