இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 7 பேர் இன்று (31.03.2020) அடையாம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்திருந்த நிலையில், மேலும் மூவர் இன்று பிற்பகல் 5 மணிவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் இன்றைய தினம் மட்டும் 10 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் நாட்டில் தற்போதைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 132 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன், இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடதக்கது.

No comments:
Post a Comment