Thursday, March 26, 2020

கொரோனாவை தடுக்க ஒவ்வொரு நாடும், எடுக்கவேண்டிய 6 நடவடிக்கைகள்

கொவிட் -19 தொற்றுநோயைத் தடுப்பதற்கான வாய்ப்பைப் தவறவிட்ட பின்னர், கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான பொன்னான நேரத்தை வீணாக்குவதை அரசாங்கங்கள் நிறுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறினார்.

கொரோனாவை தடுக்க வேண்டிய முதல் வாய்ப்பை நாம் தவிறவிட்டுவிட்டோம். உண்மையில் ஒரு மாதத்திற்கு முன்பு அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்பு நாம் செயல்பட்டிருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறினார்.

உலகிற்கு இரண்டாவது வாய்ப்பு உள்ளது, ஏனெனில் 150 நாடுகளில் 100 க்கும் குறைவான வழக்குகள் உள்ளன, இன்னும் தயாராக நேரம் உள்ளது.

ஊரடங்கை உத்தரவிட்டவர்களுக்கு நோயைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைச் செயல்படுத்த நேரம் உள்ளது.

ஊரடங்கை எவ்வளவு காலம் நீடிக்க வேண்டும் என்பது நோய் ஒழிக்கப்பட்டதை உறுதிசெய்த நாடுகள் என்ன நடவடிக்கைகள் எடுக்கின்றன என்பதைப் பொறுத்தது என டெட்ரோஸ் கூறினார்.

மேலும் ஒவ்வொரு நாடும் எடுக்க வேண்டிய ஆறு நடவடிக்கைகளின் பட்டியலை அவர் வழங்கினார்:

சுகாதாரப் பணியாளர்களை வெல்வேறு இடங்களுக்கு அனுப்புதல், பயிற்சியளித்தல் மற்றும் வரிவுப்படுத்தல் வேண்டும்.
சந்தேகத்திற்கிடமான வழக்குகளைக் கண்டறிய அமைப்புகளை செயல்படுத்த வேண்டும்.
பரிசோதனைகளுக்கான கருவிகளின் உற்பத்தி மற்றும் சோதனை மையங்களை அதிகரிக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் சுகாதார மையங்களாக மாற்றக்கூடிய பகுதிகளை அடையாளம் காண வேண்டும்.
தனிமைப்படுத்தும் நபர்களுக்கான திட்டங்களை உருவாக்க வேண்டும்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கங்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும்.

1 comment: