(ஹஸ்பர் ஏ ஹலீம்)
தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து காத்துக் கொள்ளும் முகமாக திருமலை என்.சி வீதியில் அமைந்துள்ள மொடர்ன் டெயிலரிங் நிறுவனத்தினர் ஆயிரக்கணக்கான முகக்கவசங்களை இலவசமாக தைத்து வழங்கி வருகின்றனர்.
விரும்பியோர் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கின்றனர்.
இதுபற்றி நிறுவன உரிமையாளர் முகமட் முஜீப் அவர்கள் கூறுகையில் " இந்த வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற எமது மக்களுக்கு என்னாலான உதவிகளை செய்தல் வேண்டும் என்ற எண்ணத்தில் மேற்படி பணியினை தொடக்கியுள்ளோம்.
கொட்டன் துணியினால் மேற்படி மாஸ்க் கை தைக்கின்றோம். கழுவிப் பாவிக்க கூடிய வகையில் இது உள்ளது.
வசதியுள்ளவர்கள் விலை கொடுத்து வாங்குவார்கள். வசதி இல்லாத சாதாரண மக்கள் வறுமை நிலையிலும் இதற்கொரு செலவு செய்தல் கஸ்டமான ஒன்றாகும் குடும்பத்தில் 5 பேர் என்றால் அது பாரிய செலவை தோற்றுவிக்கும். அதனை நாம் வழங்கி இந்த கொரோனா தடுப்பு போராட்டத்தில் இனைந்து கொள்கிறோம் என்று குறிப்பிட்டார். தேவையுள்ளவர்கள் எம்மிடம் வந்து இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும் என்று குறிப்பிட்டார்.
இது தற்போது அரச திணைக்களங்கள்,முப்படைகளுக்கு திருகோணமலையில் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது




No comments:
Post a Comment