- Dr. Liyauddeen, Medical Officer -
தற்போதைய நடைமுறை: COVID 19 தொற்றுக்குள்ளாகி ஒருவர் இறந்தால், அவரது பிரேத உடலானது மிகக் குறுகிய காலத்தினுள் எரியூட்டப்பட வேண்டும் என்பதற்கான சுற்று நிருபமே குறிப்பிட்ட பிரதேசங்களிலுமுள்ள சகல MOH களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவே அறிகிறோம்.
எனினும், முஸ்லீம் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான சுற்று நிருபங்கள் எதுவும் MOH களுக்கு கிடைக்கப் பெறவில்லை என்பதே அவர்கள் ஆதங்கம்.
மேலும், தெளிவான கருத்தில்லாத சில guidelines வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிகிறோம்.
இனி செய்ய வேண்டியது என்ன?
ஏற்கனவே, ACJU இன் வழிகாட்டல்களையும், Health Ministry இன் பரிந்துரைகளையும் முஸ்லிம் அரசியல்வாதிகளும், சமூகத் தலைமைகளும், சட்டவல்லுனர்களும் ஒன்றிணந்து Health Minister இன் மூலமாக இந்த விடயம் Director General of Health Services இன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, முஸ்லிம் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான மிகவும் தெளிவான, கருத்து மங்களில்லாத சுற்று நிருபமொன்றை வெளியிட ஆவண செய்ய வேண்டும்.
இதுவே மிக, மிக முக்கியமான பணியாகும்.
அடுத்து வரவிருக்கும் பிரச்சனை என்ன...?
MOH, PHI, POLICE உத்தியோகத்தர்களின் மேற்பார்வையில் ஜனாஸா எமக்கு கையளிக்கப்படுகிறது, இனி அவசரமாக அடக்கம் செய்யப்பட வேண்டும், இதை யார் செய்வது?
இறந்தவரின் நெருங்கிய சொந்தங்கள் இப்போது தனிமைப் (quarantine) படுத்தப்படுவார்கள், curfew பிரச்சினை வேறு...
இந்தத் தாமதத்தைக் காரணமாக வைத்து மீண்டும் ஜானாஸாவை அவர்கள் பொறுப்பெடுத்து எரிக்க ஏற்பாடு செய்யலாம். இதனை எவ்வாறு தவிர்க்கலாம்..?
தேவையேற்படும் என்று கருதுகின்ற சகல மையவாடிகளிலும் முன்கூட்டியே கப்றுகளைத் தோண்டி தயார் செய்து வைத்துக் கொள்வதோடு, பள்ளிவாயல் சங்கங்கள் இந்தப் பொறுப்பைச் செய்ய முன் வர வேண்டும்.

No comments:
Post a Comment