Monday, March 23, 2020

ஈரானின் மீதான பொருளாதார, தடைகள் நீக்கப்படுவது அவசியம் - மங்கள

கொரோனா வைரஸிற்கு நாட்டு எல்லைகளோ, மதமோ, மொழியோ தெரியாது. எனவே இந்த மிக மோசமான வைரஸின் தாக்கத்திலிருந்து மீள்வதற்கு நாம் அனைவரும் இலங்கையர் என்ற வகையில் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர வலியுறுத்தியிருக்கிறார்.

இதுகுறித்து மங்கள சமரவீர அவரது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்:

கொவிட் - 19 எனப்படுகின்ற கொரோனா வைரஸ் சீனாவோ அல்லது அமெரிக்காவோ அல்ல. கொரோனா வைரஸிற்கு நாட்டு எல்லைகளோ, மதமோ, மொழியோ தெரியாது.

எனவே இந்த மிக மோசமான வைரஸின் தாக்கத்திலிருந்து மீள்வதற்கு நாம் அனைவரும் இலங்கையர் என்ற வகையில் ஒன்றிணைந்து போராட வேண்டும். அதுமாத்திரமன்றி நாமனைவரும் மனிதர்கள் என்ற அடிப்படையில் உலகலாவிய ரீதியிலும் ஒன்றிணைவது அவசியமாகும்.

மேலும் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாகப் பரவி வருகின்ற ஈரானின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத தடைகள் நீக்கப்படுவது தளர்த்தப்படுவதும் அவசியமாகும்.

(நா.தனுஜா)

No comments:

Post a Comment