கொரோனா தொற்றால் விமான சேவைகள் பல இரத்துச் செய்யப்பட்டுள்ளதால், இலங்கைக்கு வரமுடியாமல் வெளிநாடுகளில் சிக்;கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான விசேட வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி செயலணியுடன் நீண்ட கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், முதலில் எந்த நாட்டிலுள்ளவர்களை அழைத்து வருவது என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment