Friday, April 10, 2020

பலாங்கொடையில் தீ - தந்தையும் மகளும் பலி

பலாங்கொடையில் வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று (11) ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனரென, பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். 

அத்துடன், குறித்த தீ விபத்திலிருந்து தாயும் மகனும் உயிர்தப்பியுள்ள நிலையில், பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்தில், 59 வயதுடைய நபரும், 19 வயதுடைய யுவதியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment