Saturday, April 4, 2020

கொழும்பில் நிர்க்கதியான புத்தளத்தை, சேர்ந்தவர்களை அழைத்து வர ஏற்பாடு

தொடரான பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் விளைவாக தொழிலுக்காக கொழும்பு சென்று திரும்ப முடியாமல் பரிதவிக்கும் புத்தளம் மாவட்ட தொழிலார்களை மீள அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியாவினால் இந்த அசாதாரண சூழ்நிலையில் மக்களுக்கு உதவும் வகையில் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் அவரின் செயலாளர்களைக்கொண்டு அமைக்கப்பட்டுள்ள "எஹியா செயலணிக்கு" கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளுக்கு இணங்கவே  இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பொலிஸ் அனுமதியோடு வாகனத்தை அனுப்பி அவர்களை அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதனை கேள்வியுற்ற அங்குள்ளவர்கள் தற்போது தொடர்புகளை ஏற்படுத்திய வண்ணம் உள்ளனர்.

இவ்வாறு கொழும்பில் வேலைக்காக சென்று நிர்க்கதியானவர்கள் புத்தளம் எஹியா செயலணி உறுப்பினர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சுஹைப்தீன் - செயலாளர்- 0767961985
இஹ்ஸான் - இணைப்பு செயலாளர்- 0757015731

(புத்தளம் தினகரன் நிருபர் - எம்.யூ.எம். சனூன்)

No comments:

Post a Comment