Sunday, April 5, 2020

நாட்டு சட்டத்தினை மதித்து, அவப்பெயர் வராது தவிர்ந்து கொள்வோம்

நம்மவர்களை சுத்தப்படுத்துவதற்காக இதனை எழுதவில்லை. எமது சமூகத்திலும் நிறைய பொடுபோக்காளர்கள், கடும்போக்காளர்கள், நாட்டு சட்டங்களை மீறுபவர்கள் இருக்கின்றார்கள் தான். இவர்களால் தான், வழியில் போன பாம்மை அள்ளி சாரத்துக்குள் போட்டுக் கொண்ட கதையாக இத்தாலியிலிருந்து சிங்களவன் கொண்டுவந்த கொரோனாவை முஸ்லிங்கள் நோக்கித் திருப்பியவர்கள். சட்டத்தின் கீழ் இவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதில் எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

என்றாலும், இலங்கையில் கொரோனா தொற்று நோய் விடயத்தில் அதிகம் விட்டுக் கொடுத்தவர்கள், பங்களிப்புச் செய்பவர்கள் முஸ்லிங்கள் தான். முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களோடு ஒப்பிடுமிடத்து மிகச் செறிவாக வாழ்பவர்கள். குறைந்த நிலப்பரப்பில் அதிக குடும்பங்கள் வாழ்கின்றனர். ஒரு வீட்டில் பல குடும்பங்கள். ஏனைய சமூகங்களோடு ஒப்பிடுமிடத்து அதிகம் கூடி வாழ்பவர்கள். ஏனைய சமூகங்களைப் போன்று, குறிப்பாக பௌத்த சிங்கள சமூகங்களைப் போன்று ஒரு பெரும் காணிப் பரப்பில் அதிக மரம் மட்டைகளோடு, வசதியான வீடொன்றில் விரல் விட்டு எண்ணக் கூடிய குடும்ப உறுப்பினர்கள் வாழ்வதனைப் போன்றல்ல முஸ்லிங்கள் வாழ்வது. பெரும்பாலான முஸ்லிம் வீடுகளில் கடும் கோடை காலங்களில் அனல் பறக்கும். இப்பொது அடிக்கும் கோடை சிங்கள ஊர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல, அவர்கள் பெரிய நிலப்பரப்புக்களில் குறைந்த சனச் செறிவுடன் வாழ்பவர்கள். ஊரடங்கு காலங்களில் அவர்களுக்கு வீடுகளிலும் சுற்றிவர உள்ள காணிகளிலும் உல்லாசமாக வாழ முடியும். ஆனால் முஸ்லிம் மக்கள் வாழும் ஊர்கள் இதற்கு நேர்மாற்றமானது. வெப்பம், புழுக்கம் அதிகம். இப்படியிருக்கும் அதிகமான முஸ்லிம் மக்கள் நாட்டு சட்டத்தினை மதித்து வீடுகளில் அடங்கிக் கிடக்கின்றார்கள். ஒரு சில தருதலைகளால் முழு சமூகத்திற்கும் அவப் பெயர் கிடைக்கின்றது. சிங்களவர்களும் நிறைய ஊரடங்குச் சட்டத்தினை மீறுகிறார்கள். ஆனால், அவை சமூக ஊடகங்களில் பெரிதாகக் காட்டப்படுவதில்லை. மீறுபவர்கள் முஸ்லிம்கள் மாத்திரமே என்ற பிரமையை நாட்டில் கட்டமைத்து விட்டார்கள்.

சமயக் கிரியைகளை மேற்கொள்வதிலும் மிகப் பாரிய விட்டுக் கொடுப்பை செய்த சமூகம் முஸ்லிம் சமூகமே. அன்றாடம் ஐவேளை பள்ளிவாயலோடு தொடர்பு பட்ட சமூகம், எந்தப் பெரிய குடிகாரனாக இருந்தாலும் வௌ்ளிக்கிழமைக்குக் குளித்து சுத்தமாகி ஜூம்ஆக்குச் செல்லும் முஸ்லிம். சிங்கள சமூகத்தினைப் போன்று போயா தினத்திலும் பன்சாலை செல்லாது சாராயம் குடிப்பதற்கு இடம் கேட்டு, அதற்கு மறுத்தவர்களைக் கொலை செய்யும் சமூகம் போன்றதல்ல. இப்படியிருக்க, ஏனைய சமயத்தவர்களுக்கு முன்னாலேயே பள்ளிவாயல்களை மூடுமாறு தலைமை பீடம் அறிவுறுத்தல் கொடுத்த ஒரே சமூகம் முஸ்லிம் சமூகம்.

மக்களுக்கு உலர் உணவுப் பொருட்களை முஸ்லிம் சமூக நிறுவனங்கள் ஊடாக அதிகம் வழங்கிய சமூகம். கொரோனா வைத்தியச் செலவுக்கு அதிக நிதிக் கொடைகளை வழங்கியது முஸ்லிம் தனவந்தர்களாகவே இருக்க முடியும்.

இத்தனைக்கும், ஒரு சிலரின் தவறுகளை பூதாகரப்படுத்தி சமயத்தினையும், சாதியையும் இழுத்து சிங்கள கேடுகெட்ட இனவாதிகளால் மிகக் கேவலமாக வசை பாடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையிலும் மிகப் பொறுமையாக இருக்கும் சமூகம். அவர்கள் மேற்கொள்ளும் வெறுப்புப் பிரச்சாரத்தின் ஒரு வீதத்தினை நாம் செய்தாலும் நாடு பற்றியெறியும். அந்தளவுக்குப் பொறுமை இல்லாதவர்கள். ஆனால், அவர்கள் எமக்குப் பொறுமைப் பாடம் எடுப்பது தான் வேடிக்கை.

ஆக, இந்த சிங்கள இனத்துவெசிகளின் பழிப்புறைகளுக்கு அஞ்சி எம்மவர்களை நாங்கள் விமர்சிக்கத் தேவையில்லை. தவறு செய்யும் தருதலைகளைத் திருத்துவோம். திருந்தாவிட்டால் பாதுகாப்புத் துறைக்குப் பிடித்துக் கொடுப்போம். எம்மவர்கள் மத்தியில் இனியும் நோய் பரவாமல் பாதுகாத்துக் கொள்வோம். எமது முஸ்லிம் ஊர்கள் இனியும் லொக் டவுன் செய்ய வழி செய்யாமல் கண்ணும் கருத்துமாக இருப்போம். அத்தியவசியப் பொருட்களை வாங்குவதற்கு ஊரடங்குச் சட்டத்தினைத் தளர்த்தும் வேளையில் வைத்திய அறிவுறுத்தல்களைப் பேணி நடப்போம்.

சிங்களவனிடம் நல்ல பெயர் வாங்குவதற்கு எமது செல்வங்களை அழித்துக் கொள்ளத் தேவையில்லை. அவனிடம் என்றும் எமக்கு நல்ல பெயர் இல்லை. நாம் நாமாக, நாட்டு சட்டங்களை மதித்து நாட்டுக்குத் தொந்தரவில்லாமல் வாழ்ந்தால் எந்த சிங்களவனிடமும் நல்ல பெயர் வாங்குவதற்கு எமது செல்வங்களை அள்ளியிறைக்கத் தேவையில்லை. நாம் நாட்டு சட்டங்களை மீறி தான்றோன்றித் தனமாக நடந்து விட்டு, எவ்வளவு நிதிகளை அள்ளிக் கொட்டினாலும் விழலுக்கிறைத்த நீர் மாதிரிதான். எமது சமூகத்தில் எத்தனையோ தேவைகள், செயற்றிட்டங்கள் கிடப்பில் கெடக்கின்றன. புனருத்தாபனம் செய்யப்பட வேண்டிய ஆயிரக்கணக்கான முஸ்லிம் போதைப் பொருள் பாவனையாளர்கள் இருக்கின்றனர். கழிப்பறை வசதியில்லாத ஆயிரக் கணக்கான வீடுகள் இருக்கின்றன. திருமணம் செய்ய வசதியில்லாத ஆயிரக்கணக்கான அபலைப் பெண்கள் இருக்கின்றனர். மனித, பௌதீக ரீதியாக பாரதூரமாகப் புறக்கணிக்கப்படும் முஸ்லிம் பாடசாலைகள் நூற்றுக் கணக்கில் இருக்கின்றன. இன்னுமே எமது பக்க நியாயங்களைப் பேசக் கூடிய ஒழுங்கான ஒரு மீடியா இல்லை. இயங்கும் அச்சு ஊடகங்களும் பெரும் நஷ்டத்திலேயே ஓடுகின்றன. 

இப்படி ஆயிரக் கணக்கான சமூகத் தேவைகள் இருக்க, 50 மில்லியன் என்றும் 10 மில்லியன் என்றும் அரசுக்கு நன்கொடை வழங்கி விட்டு, ஏழை முஸ்லிங்களிடம் இருந்து பணங்களைத் திரட்டி சிங்களவனுக்கு உணவுப் பொதிகளை வழங்கி விட்டு "நாம் உதவி செய்தோம்" என்று சமூக வலைதளங்களில் பகிர்ந்து சுய இன்பம் காண வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. அந்த நிதிகளை எமக்குத் தந்து பாருங்கள். அருமையான கல்வி சார் செயற்றிட்டங்களை வடிவமைத்து நல்ல பெருபேறுகளை பெற்றுக் காட்டுவோம். இல்லை, மற்ற சமூகங்களுக்கும் உதவ வேண்டுமென்றால் மலையகத்திலுள்ள தோட்டத் தமிழ் சமூகம், வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்திற்கு வழங்குங்கள். சதாவும் எமது சமூகத்தினை இழித்துறைக்கும் இனவாத சமூகத்திற்கு வழங்காதீர்கள்.

பாதுகாப்பாக இருங்கள், வீடுகளில் இருங்கள். நேரம் போகவில்லையா? நல்ல நூல்களை எடுத்து வாசியுங்கள். பிள்ளைகளின், தம்பி, தங்கைகளின் பாடசாலை அப்பியாசப் புத்தகங்களை எடுத்து சரிபாருங்கள். அவர்களுக்கு எழுத்துக்களைக் கற்பியுங்கள். எமது ஆசிரியர்களால் முன்னெடுக்கப்படும் வட்ஸ்அப் வழி கற்பித்தல் செயற்பாடுகளில் உங்கள் பிள்ளைகளை ஈடுபடுத்துங்கள். வீடுகளை சுத்தம் செய்யுங்கள். உங்கள் பூக் கைகளால் மரங்களை நடுங்கள். மனைவியின், உம்மாவின் சமையல் பணிகளுக்கு உதவுங்கள். சங்க நிர்வாகிகளாயின் அது தொடர்பான எழுத்துப் பணிகள், தரவு திரட்டல், முன்னேற்ற அறிக்கை (Performance report) , தந்திரோபாய செயற்றிட்டம் Strategic Plan) போன்றவற்றினைத் தயாரியுங்கள். இவை எதுவுமே முடியாவிட்டால் நன்றாகத் தூங்கி எழும்புங்கள்.

Rasmy Galle.

No comments:

Post a Comment