இலங்கையினுள் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தியாகத்துடன் செயற்பட்ட அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பணப் பரிசு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2020. 03.11ம் திகதியிலிருந்து 2020.04. 10 திகதி வரையிலான காலப்பகுதியில் தியாகத் தன்மையுடன் செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இலங்கை பொலிஸ் இந்த தொகை வழங்க தீர்மானித்துள்ளது.
பொலிஸ் மா அதிபரினால் அனுமதிக்கப்பட்ட குறித்த பணத்தொகையினை வழங்குவதற்காக மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு தேவையான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, பிரதான பொலிஸ் பரிசோதகர் மற்றும் அவருக்கு கீழ் பதவியில் உள்ள ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் பொலிஸ் பரிசு நிதியத்தில் இருந்து பணப்பரிசு வழங்கப்பட உள்ளது.

No comments:
Post a Comment