Saturday, April 11, 2020

எமிரேட்ஸில் உள்ள இலங்கை, தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இலங்கை கோவிட் 19  நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என சமூக ஊடகங்களில் பரவி வரும், வீடியோக்கள் மற்றும் பதிவுகள்   தவறானது என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இலங்கை தூதரகம் அதில் தெரிவித்துள்ளது.

 அதேவேளை  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள  இலங்கை நாட்டினருக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு உதவ பங்களித்த பங்கை இலங்கை அரசு பாராட்டு உள்ளது.

 தவறானது , உறுதி செய்யப்படாதது  என கண்டறியப்பட்ட சில வீடியோ கிளிப்புகள் சமூக ஊடகங்களில் பரவி வருவதை இலங்கை தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

COVID-19 தொற்றுக்க்கு உள்ளான  இலங்கை நாட்டவர்கள் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள், அவை நன்கு நிர்வகிக்கப்பட்டு வரும்  உயர் தரமானவை.

இலங்கை தூதரகம், இலங்கை தூதரக பொது அலுவலகம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், நலன்புரி அமைப்புகள் மற்றும் பிற சமூக மற்றும் மத அமைப்புகளும் இலங்கை நாட்டினருக்கு உலர் உணவு மற்றும் பிற தேவைகளை விநியோகிக்க உதவி வருகின்றன.

தயவுசெய்து இலங்கை தூதரகம் அல்லது இலங்கை தூதரக பொது அலுவலகம் ஆகியவற்றிலிருந்து வரும் அறிக்கைகளை மட்டும் கவனத்தில் கொள்ளவும்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இலங்கை தூதரகத்திலிருந்து முழு அறிக்கை


No comments:

Post a Comment