இந்த ஆர்ப்பாட்டம் இன்று செவ்வாய்க்கிழமை பகல் கொழும்பு - இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக அமைதியான முறையில் நடந்தது.
ஒரு சில முஸ்லிம்களால் நடத்தப்பட்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பிஸ்னுலாபி அமீர் இஸ்ஸதீன்,
எங்கள் மக்கள் கட்சி ஊடாக கம்பஹா மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஞானசார தேரர் தலைமையிலான கட்சிக்கு 65000க்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன. அக்கட்சிக்கு ஒரேயொரு ஆசனம் தேசியப்பட்டியல் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.
ஆனாலும் அவருக்கு தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்வதற்கு பலர் இடையூறு செய்கின்றனர். தேர்தல்கள் ஆணைக்குழு அவருக்கு நாடாளுமன்றம் செல்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்றார்.


No comments:
Post a Comment