மைத்திரிபாலவுக்கு ஒரு குறிப்பிடத்தக்க பதவி நிச்சயம் வழங்கப்படும்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தற்போதைய அரசாங்கத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பதவி நிச்சயம் வழங்கப்படும் என்று நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினையும் ஒரே கட்சியாக இணைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
எல்பிட்டியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது ஊடகங்களிடம் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.
No comments:
Post a Comment