அதாஉள்ளாஹ் ஆதரவாளர்கள்,
பற்றி எரியும் உங்கள் மனங்களைப் புண்படுத்துவதாக எண்ண வேண்டாம். சில யதார்த்தங்களைச் சொல்ல வேண்டும்.
முதலில் NC தலைவர் அதாஉள்ளாஹ் அவர்களை அமைச்சுப் பதவி வழங்காமல் அவமானப்படுத்தியதை கண்டிக்கிறோம்.
ஆனால் இந்த அரசுக்காக நீங்கள் கட்டிய #கஃபத்துள்ளாவும், இந்த ஆட்சிக்கு கொடுத்த உலகப் புனிதவான் சான்றிதழும் சரியானதா? என்பது இப்போது புரிந்திருக்கும்.
இன்றும் கூட புரியாமல் இருந்தால் உங்கள் அரசியல் உணர்வுக்கு என்ன சொல்ல இயலுமோ தெரியாது. நீங்கள் அக்கரைப்பற்று பாலத்தையும் தாண்டி கொஞ்சம் யோசிக்கும் போதே, கொழும்பின், தென்னிலங்கையின் தற்போதைய மனோநிலை எப்படி உள்ளது என்று புரிந்து கொள்ள முடியும்.
இதையே பலமுறை நாங்கள் பேசி வந்தோம். இந்த ஆட்சியைக் கைப்பற்றிய முக்கிய #துரும்பு #முஸ்லிம் இனவாதமே என்பதை இப்போதாவது புரிந்து கொண்டிருப்பீர்.
நமக்குள் றிஷாத், ஹக்கீம், அதாஉள்ளாஹ் என்று வேறுபாடு இருந்தாலும் #அவர்களுக்கு நாம் எல்லோருமே முஸ்லிம் என்ற ஒன்று தான்.
நல்லதைச் சொல்லும் போது நாங்கள் மடையர்களே. ஏற்றி விட்டு ஏணியைத் தூக்குவதில் இந்தக் குடும்பத்தை விட யார் இருப்பர்? டக்ளஸுக்கு அமைச்சு ? ஏன் சேர்?..
அரசியலின் யதார்த்தம் வேறு நீங்கள் புரிந்து கொண்ட யதார்த்தம் வேறு. இன்னும் காலமிருக்கிறது நீங்கள் இந்த அரசைப் புரிந்து கொள்ளா விட்டாலும் உங்களை நம்பி வந்த சாய்ந்தமருதவர் புரிந்து கொள்வார்கள். பொறுத்திருப்போம் இணைந்து போவோம் #கரைந்து விடாது.

No comments:
Post a Comment