Saturday, August 15, 2020

கஞ்சிபானை இம்ரானை, வணங்கும் சிறை அதிகாரி


சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் விற்பனையாளரான கஞ்சிபானை இம்ரானை, சிறைச்சாலை அதிகாரி ஒருவர் வணங்கும் காணொளி ஒன்று தனக்கு கிடைத்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.


முக்கியமான குற்றவாளிகளை சிறையில் அடைப்பதன் மூலம் மாத்திரம் குற்றங்களுக்கு தீர்வு கிடைக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.


சிறைச்சாலைகளுக்குள் இருந்தவாறு குற்றச்செயல்களில் ஈடுபடுவது தொடர்பான தகவல்கள் தொடர்ந்தும் கிடைத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment