Wednesday, December 23, 2020

20 நாள் குழந்தையின் பெற்றோர், அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல்


கொரோனாவால் உயிரிழந்த நிலையில் உடல் தகனம் செய்யப்பட்ட 20 நாள் குழந்தையின் பெற்றோர் தங்கள் சட்டத்தரணி மூலமாக அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

லேடி ரிஜ்வே மருத்துவமனையில் அதிகாரிகள் செயற்பட்ட விதத்தினை தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ள பெற்றோர் மருத்துவமனை அதிகாரிகள் அவசர அவசரமாக உடலை தகனம் செய்தனர் என குறிப்பிட்டுள்ளனர்.

தங்கள் குழந்தை உயிரிழந்ததை தொடர்ந்து குழந்தையின் உடலை இரண்டாவது பிசிஆர் சோதனைக்கு உட்படுத்துமாறு கேட்டுக்கொண்டதாக தமது மனுவில் தெரிவித்துள்ள பெற்றோர் ஆனால் அதற்கு அனுமதிக்ககிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

நவம்பர் 18ம் திகதி பிறந்த குழந்தை நல்ல உடல்நிலையுடன் காணப்பட்டது,எங்கள் பகுதி முற்றாக முடக்கப்பட்டிருந்ததன் காரணமாக எவருடனும் நாங்கள் தொடர்பிலிருக்கவில்லை எனவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

எனினும் ஏழாம் திகதி குழந்தைக்கு காய்ச்சல் காணப்பட்டது இரவு பத்துமணியளவில் குழந்தையை லேடி ரிஜ்வே மருத்துவமனைக்கு அவசரஅவசரமாக கொண்டு சென்றோம் என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் பெற்றோர்களையும் குழந்தையையும் சோதனைக்கு உட்படுத்திய பின்னர்குழந்தை கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர் என பெற்றோர்கள் தங்கள் அடிப்படை உரிமை மீறல் மனுவில் தெரிவித்துள்ளதுடன் மருத்துவமனை அதிகாரிகள் தங்களை குழந்தையை மருத்துவமனையில் விட்டுவிட்டு செல்வுமாறு கேட்டுக்கொண்டனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைக்கு பாலூட்டி பராமரிப்பதற்கு அனுமதிக்குமாறு தாய்மன்றாட்டமாக வேண்டுகோள் விடுத்தார் ஆனால் மருத்துவமனை அதிகாரிகள் அதனை ஏற்க மறுத்ததுடன் மருத்துவமனையுடன் தொலைபேசி மூலம் தொடபுகொள்ள முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர் என பெற்றோர் தமது மனுவில் தெரிவித்துள்ளனர்.

8ம்திகதி மருத்துவமனையிலிருந்து அழைத்து பிசிஆர் சோதனை நடத்தப்பட்டது குழந்தை கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர் குழந்தையின் நிலைமை குறித்து தகவல்களை தெரிவிப்பதாக குறிப்பிட்டனர் எனவும் பெற்றோர் தமது மனுவில் தெரிவித்துள்ளனர்.

எனினும் எங்களிற்கு மருத்துவமனையிலிருந்து அழைப்பு வரவில்லை இதனை தொடர்ந்து அதிகாலை 5.15ற்க்கு நாங்கள் மருத்துமனையை தொடர்புகொண்டவேளை அதிகாலையில் குழந்தை இறந்துவிட்டது என தெரிவித்தனர் என பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் பின்னர் குழந்தையின் உடலை தகனம் செய்வதற்கு அவசரப்பட்டனர் பெற்றோரையோ உறவினர்களையே குழந்தையின் உடலை பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை அதிகாரிகள் எழுத்து மூலம் சம்மதத்தை கோரினர் எனவும் அடிப்படை மனுவில் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment