பிரபல சட்டத்தரணியும், வர்த்தகரும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் சோசலிச ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருமான ரொஹான் பெலவத்த ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளார்.
இன்றைய தினம் -24- அவர், ஐக்கிய மக்கள் சக்தியில் அதிகாரபூர்வமாக இணைந்து கொண்டுள்ளார் என தெரியவருகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை, ரொஹான் பெலவத்த இன்று சந்தித்துள்ளார்.
பெலவத்த, ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுவில் இணைத்துக் கொள்ளப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கட்சியின் வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வர்த்தக பிரிவு பெலவத்தவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

No comments:
Post a Comment