Tuesday, December 22, 2020

இனிப்பு உணவுகளை உட்கொள்ளாமல் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்க - Dr ஷாந்தி குணவர்தன


எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியில் முடிந்தளவு இனிப்பு உணவுகளை உட்கொள்ளாமல் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ளுமாறு சுகாதார அமைச்சின் விசேட வைத்தியர் ஷாந்தி குணவர்தன மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவும் இந்த சந்தர்ப்பத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் அதன் மூலம் உடலுக்கு கொரோனா கடுமையான பாதிப்பு ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசேடமாக இனிப்பு சுவை அதிகமாக உணவுகள் மூலம் உடலுக்கு நீரிழிவு நோய் ஏற்படுத்தும் என்பதனால் அது கொரோனா வைரஸ் தொற்றிற்கு சாதகமான நிலைமையை ஏற்படுத்தும் என அவர் கூறியுள்ளார்.

நீரிழிவு உட்பட பல நோய்களினால் பாதிக்கப்படும் நபர்கள் தங்களின் நோய் நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக வைத்திய ஆலோசனைக்கமைய மருந்து பெற்றுக் கொள்ளுமாறு வைத்தியர் குறிபபிட்டுள்ளார்.

அதற்கமைய விசேடமாக புதிய மரக்கறிகள் மற்றும் பழ வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளளுமாறும் அவர் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment