Wednesday, December 23, 2020

கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் PCR பரிசோதனை


(எம்.மனோசித்ரா)

இலங்கை இதய நோய்கள் தொடர்பான வைத்திய சங்கத்தின் கோரிக்கைக்கு அமைய ஹேமாஸ் சமூக சேவை அமைப்பினால் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பிசிஆர் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளதால் எதிர்வரும் நாட்களில் இங்கும் பிசிஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை இதய நோய்கள் தொடர்பான வைத்திய சங்கத்தின் கோரிக்கைக்கு அமைய ஹேமாஸ் சமூக சேவை அமைப்பினால் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு 5 மில்லியன் ரூபா பெறுமதியான பிசிஆர் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இந்த இயந்திரம் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியிடம் கையளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment