முன்னாள் இராணுவதளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகாவை கழுதை என தெரிவித்தமைக்காக சமல் ராஜபக்ச மன்னிப்பு கோரியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று -08- சூடான விவாதங்கள் இடம்பெற்றவேளை சமல் ராஜபக்ச சரத்பொன்சேகாவை என கழுதை என தெரிவித்துள்ளார்.
2010 இல் சமல் ராஜபக்ச தன்னை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினார் என சரத்பொன்சேகா குற்றம்சாட்டினார்.
எனினும் இதனை மறுத்த சமல் ராஜபக்ச தான் சரத்பொன்சேகாவை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதாக தெரிவித்தார்.
எனினும் தொடர்ந்தும் இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.
இதன்போது சமல்ராஜபக்ச சரத்பொன்சேகாவை கழுதை என அழைத்தார்.
சரத்பொன்சேகா தொடர்ந்தும் சமல்ராஜபக்சவிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை தொடர்ந்து சமல்ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வெளியே வந்து, தன்னை எதிர்கொள்ளுமாறு சரத்பொன்சேகாவிற்கு எச்சரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் ஆரம்பமானவேளை சமல் ராஜபக்ச தனது நடவடிக்கைக்காக மன்னிப்பு கோரினார்.
தான் தெரிவித்த விடயங்களால் எவரையாவது காயப்படுத்தியிருந்தால், அதற்காக மன்னிப்பு கோருவதாக சமல் ராஜபக்ச தெரிவித்தார்.
No comments:
Post a Comment