Thursday, April 22, 2021

கொரோனாவை கட்டுப்படுத்த முக்கிய, நடவடிக்கைக்கு தயாராகிறது அரசாங்கம் - இன்று முக்கிய கூட்டம்


கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான பல நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் இன்று -23- ஆராயவுள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கொவிட் 19 தொடர்பான செயலணியுடன் இன்று பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுமக்கள் பெருமளவில் ஒன்றுகூடும் நிகழ்வுகளிற்கு தடை விதிப்பது அல்லது அவ்வாறான நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment