Sunday, April 18, 2021

குடியிருப்பு கடையைத் துவம்சம் செய்த யானைகள் - முத்துநகர் கிராமத்தில் சம்பவம்


- ஹஸ்பர் ஏ ஹலீம் -

 திருகோணமலை மாவட்டம் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்துக்குட்பட்ட முத்துநகர் கிராமத்துக்குள் (17) நுழைந்த காட்டு யானைகள் வீட்டுடன் கூடிய கடையை முற்றாக நாசம் செய்துள்ளது.

இதனால் வீட்டின் பல குதிகள் சேதமடைந்துள்ளதுடன் கடையில் உள்ள பொருட்களும் யானையினால் சிதைக்கப் பட்டுள்ளன

தொடர்ந்து இப்பகுதிக்குள் நுழையும் காட்டு யானைகளினால் உயிர்க்கு உத்தரவாதம் இல்லை எனக் கூறுகின்றனர்

அத்துடன் இரவில் நடமாடுவதும் வெளியில் செல்வதும் அச்சமாக உள்ளதாகக் கூறுகின்றனர்

யானை வேலிகளும் சீராக இல்லாததனால் தாம் பல் வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

யானையினால் ஏற்பட்ட சேதத்துக்கு சம்பந்தப் பட்ட அதிகாரி இழப்பீடுகளை வழங்குமாறும் யானைகளைக் கட்டுப்படுத்தித் தருமாறும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.




No comments:

Post a Comment