27 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த பல்கலைக்கழக கல்வி நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது
27 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை 2 வாரங்களுக்கு பிற்போட கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கொரோனா தொற்று பரவலை கருத்திற்கொண்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று காலை வழங்கிய ஆலோசனையின் பிரகாரம் இந்த தீர்மானத்தை எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவிருந்தது.

No comments:
Post a Comment