Monday, April 19, 2021

முஸ்லீம் தீவிரவாதம் இல்லை என நான் தெரிவிக்கவில்லை, சர்வதேச வஹாபிசம் குறித்தே தெரிவித்தேன் - மல்கம் ரஞ்சித்


நான் நாட்டில் முஸ்லீம் தீவிரவாதம் இல்லை என குறிப்பிடவில்லை, எந்த அரசியல் சக்தியையும் குறிப்பிடவில்லை - நேற்றைய கருத்து குறித்து தெளிவுபடுத்தினார் கர்தினால் மல்கம் ரஞ்சித் 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து நேற்று தான் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து கர்தினால் மல்கம் ரஞ்சித் தெளிவுபடுத்தியுள்ளார்.

நாட்டில் முஸ்லீம் தீவிரவாதம் இல்லை என நான் தெரிவிக்கவில்லை என  கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

நான் நாட்டில் எந்த அரசியல் சக்தி குறித்தும் குறிப்பிடவில்லை நான் சர்வதேச அளவில் காணப்படும் வஹாபிசம் குறித்தே தெரிவித்தேன் என  கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

உலகின் வலிமைமிக்க நாடுகள் வஹாபிசத்தை  தங்களின் சாதனமாக பயன்படுத்தலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளுர் அரசியல் கட்சிகள் குறித்தோ, அதன் தலைவர்கள் குறித்தோ நான் எதனையும் தெரிவிக்கவில்லை சர்வதேச சக்திகள் குறித்தே நான் தெரிவித்திருந்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நேற்று கருத்து வெளியிட்டிருந்த அவர்

மததீவிரவாதத்தை பயன்படுத்தி தனது அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்த நினைத்த குழுவொன்றே உயிர்த்தஞாயிறு தாக்குதல்களை முன்னெடுத்தது என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்திருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் உயிரிழந்த ஒன்பது பேரின் நினைவாக பொரளை மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியை திறந்துவைத்த பின்னர் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்திருந்தார்.

தனது இனமதத்தை சாராதவர்களுக்கு எவருக்கும் எவரும் தனிப்பட்ட இலக்குகள் நோக்கங்களிற்காக  தீங்கிழைக்ககூடாது என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்திருந்தார்.

இது அனைத்து சமூகங்களையும் சேர்ந்த மக்களிற்கும் பொதுவான விடயம் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

அவ்வாறான விடயங்கள் இடம்பெற்றால் உலகம் துரதிஸ்டவசமாக மோசமான இடமாக மாறிவிடும் என அவர் தெரிவித்திருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மதம்தொடர்பான வெறித்தனத்தினால் இடம்பெறவில்லை மாறாக அதிகாரத்தை கைப்பற்றி வலுப்படுத்துவதற்காக அது இடம்பெற்றது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி வழங்கப்படுவதற்காக உலகம் காத்திருக்கின்றது என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்திருந்தார். Thinakkural

No comments:

Post a Comment