Saturday, April 3, 2021

கிறிஸ்தவ சகோதரங்களை நினைவுகூர்ந்து, பிரார்த்தனைகளில் சேர்த்துக் கொள்ளவும் உறவுகளை பலப்படுத்தவும் வேண்டுகோள்


உயிர்த்த ஞாயிறு தினமானது கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கு மிக முக்கியமானதொரு நிகழ்வாகும்; அது விசுவாசத்துக்கும் எதிர்பார்ப்புக்குமானதொரு சந்தர்ப்பமாகும். எனவே, இந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் கிறிஸ்தவ சகோதரங்களை நினைவுகூறுமாறும் தங்களது பிரார்த்தனைகளில் அவர்களை சேர்த்துக் கொள்ளுமாறும் அனைத்து முஸ்லிம்களையும் முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வேண்டிக் கொள்கின்றது. 

நீதியையும் நன்மையையும் புதுப்பிப்பதற்கான செய்தி, நம் அனைவரையும் ஆசுவாசப்படுத்தக் கூடியதாக இருப்பதுடன் அவை கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய நம்பிக்கைகளில் பிரதானமான அடிப்படைகளாகும். 

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்தத் தினத்தில் ஒரு மிருகத்தனமான பயங்கரவாதத் தாக்குதலினால் கிறிஸ்தவ சகோதரங்கள் சொல்லொன்னாத் துயரங்களுக்கு உட்படுத்தப்பட்டார்கள். குறித்த தாக்குதலை கண்டிப்பதிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோருவதிலும் முழு இலங்கையருடன் முஸ்லிம் சமூகமும் இணைந்து கொள்கிறது. 

சமாதானம் மற்றும் நினைவு கூறல் என்ற செய்தியுடன் இந்தத் தினத்தில் கிறிஸ்தவ சகோதரங்களை சந்தித்து உறவுகளை பலப்படுத்திக் கொள்ளுமாறு சகல மஸ்ஜித்களையும் திணைக்களம் வேண்டிக் கொள்கின்றது, 

முஸ்லிம்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் இந்துக்கள் மத்தியில் நடுநிலைத்தன்மை, சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் எம் செயற்பாடுகளை அமைத்துக் கொள்வோமாக.

ஏ.பீ.எம்.அஷ்ரப்

பணிப்பாளர்

முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம்

03.04.2021

No comments:

Post a Comment