Saturday, April 3, 2021

சஜித்திற்கு காரசாரமான கடிதம் அனுப்பிய டயானா Mp - வீட்டுக்கு அழைத்து பாராட்டிய ரணில்


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு காரசாரமான கடிதமொன்றை அனுப்பிய டயானா கமகேவின் செயலை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெரிதும் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், தன்னை ஐக்கிய மக்கள் சக்தி உறுப்புரிமையில் இருந்து நீக்கி, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் ரத்துச் செய்வதற்கான முயற்சி தொடர்பாக டயானா கமகே சமீபத்தில் சஜித் பிரேமதாசவுக்கு காரசாரமான கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

இந்தக் கடிதம் ஊடகங்களினூடாக வெளியாகியிருந்த நிலையில், அதைப் பார்த்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் மிகுந்த மகிழ்ச்சியுடன், உடனடியாக தன்னை சந்திக்க வருமாறு டயானா கமகேவிற்கும் சேனக த சில்வாவிற்கும் அறிவித்துள்ளார்.

இதற்கமைய அவர்கள் கொள்ளுப்பிடியவில் அமைந்துள்ள ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோபூர்வ இல்லத்தில் சந்தித்துள்ளதுடன் அதன் போது ரணில், டயானா கமகேவின் நடவடிக்கையை பாராட்டியுள்ளதாக அறியமுடிகிறது.

இந்தச் சந்திப்பு ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார, தவிசாளர் வஜிர அபேவர்தன ஆகிய அதிகாரிகள் குழு உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் டயானாவினால் சஜித்திற்கு எழுதப்பட்ட கடிதத்தினால் ஐதேகவிற்கு உயிர் கிடைத்தாற் போல பேசிக்கொண்டுள்ளனர்.

இதேவேளை சஜித் பிரேமதாசவிற்கு எதிராக மேற்கொள்ளும் செயல்களை தொடர டயானா கமகேவிடம் ரணில் உள்ளிட்ட ஐதேக குழு கோரிக்கை விடுத்துள்ளதுடன், அதன்போது எது நடந்தாலும் டயானாவிற்கு ஐக்கிய தேசிய கட்சியின் உயர் பதவியை வழங்குவதாக வாக்குறுதி வழங்கியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. IBC

No comments:

Post a Comment