ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் விசாரணை பொறிமுறை தொடர்பில் மாற்றுக்கருத்துக்கள் எவையும் காணப்படக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் ஜெனீவாவின்நிகழ்ச்சி நிரலில் இருக்கின்றோம், நாங்கள் அச்சுறுத்தல்கள் குறித்து யதார்த்தபூர்வமாக சிந்திக்கவேண்டும், என்ன நடந்தது என்ற உண்மையை தெரிவிப்பதற்கு தாமதமின்றி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
எங்கள் கருத்தினை முன்வைப்பதற்கு எங்களிற்கு இன்னுமொரு வாய்ப்பு கிடைக்காது நாங்கள் பொறுப்புக்கூறல்விடயத்தினை திறந்த மனதுடன் அணுகவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னைய அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய தீர்மானத்திலிருந்து இலங்கை விலகியது பொருத்தமற்ற விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் இலங்கையைகொண்டு செல்ல முடியாது என்பதற்காக இலங்கை விடயங்களை அலட்சியப்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்த குற்றச்சாட்டுகள் குறித்த விவகாரங்களை கையாள்கின்றவர்கள் யுத்தத்தின் இறுதிகாலங்கள் குறித்தே கவனம் செலுத்துகி;ன்றனர் என தெரிவித்துள்ள மேஜர் ஜெனரல் சகிகலகே விடுதலைப்புலிகளின் தோல்வியை சகிக்க முடியாத உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளால் இலங்கை இலக்குவைக்கப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
ஜெனீவா சவாலை எதிர்கொள்வதற்கு உறுதியான முயற்சிகள் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி மார்ச் அமர்வு முடிவடைந்துவிட்டதால் இலங்கை தற்போதைக்கு ஜெனீவாவிலிருந்து எழக்கூடிய அச்சுறுத்தலை மறந்துவிடாது என எதிர்பார்ப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொய்களை உறுதியாக எதிர்கொள்ளாதமைக்காக அரசாங்கம் பெரும் விலையை செலுத்தியது என குறிப்பிட்டுள்ள அவர் நாட்டின் படையினருக்கு எதிராக பொய்களை தெரிவிப்பவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக காணப்படுகின்றார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இது மிகவும் துரதிஸ்டவசமானது என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்த்தின் பின்னரும் இலங்கை தன்மீதான குற்றச்சாட்டுகளை வெற்றிகரமாக நிரகரிக்க தவறியுள்ளமை மிகப்பெரும் தியாகத்தை செய்தவர்களிற்கு காயமடைந்தவர்களிற்கு செய்யப்பட்ட அவமானம் என ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
நிருபிக்கப்படாத விடயங்கள் மற்றும்பரிந்துரைகளின் அடிப்படையில் தனிப்பட்ட நாடுகள் நடவடிக்கை எடுக்கமுடியும் என அவர் தெரிவித்துள்ளார். Thinakkural
No comments:
Post a Comment