Saturday, May 8, 2021

தாத்தா ஆனார் ஜனாதிபதி, பேத்தியைக் காண அமெரிக்காவுக்கு பறந்தார் மனைவி


ஜனாதிபதியின் குடும்பத்திற்கு புதிதாக பேத்தி ஒருவர் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஜனாதிபதியின் மகன் மனோஜ் ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி தற்போது அமெரிக்காவில் உள்ள நிலையில் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதனடிப்படையில் தனது பேத்தியை பார்ப்பதற்காக, ஜனாதிபதியின் மனைவி அமெரிக்க நோக்கி பயணித்துள்ளார். 

ஜனாதிபதியும் அவருடன் பயணிக்கவிருந்ததுடன், நாட்டில் நிலவும் கொவிட் நிலையை கருத்திற் கொண்டு அவர் தனது பயணத்தை இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment