Sunday, March 13, 2022

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள், நாட்டுக்கு பணம் அனுப்புவதில்லை என இராஜாங்க அமைச்சர் கவலை


வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் எவரும் இலங்கைக்கு பணம் அனுப்புவதில்லை என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

ஏராளமான இளைஞர்கள் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருவதாகவும், அவர்கள் தங்கள் பணத்தை அங்கேயே வைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் பொருட்களின் விலை அதிகரிப்பை தாம் விரும்பவில்லை எனவும், கூடிய விரைவில் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ibc

No comments:

Post a Comment