முஸ்லிம் எமது தனியார் சட்டங்களைப் பாதுகாப்பதற்கான அமைதிப் பேரணி இன்று மாலை (05) கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெற்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான பேரவையின் 49வது அமர்வுகள் நடைபெறுகின்ற இக்காலகட்டத்தில் இவ்வாறான பேரணிகள் நாடு பூராகவும் எற்பாடு செய்யப்பட்டு சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதன் மூலம் எமது உரிமைகளை உத்தரவாதப்படுத்த தேவையான அழுத்தத்தினை அரசாங்கத்திற்கு வழங்க முடியும் என ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எதிர்வரும் காலங்களில் அவ்வாறான முன்னெடுப்புகளைச் செய்பவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கவும் வழிகாட்டல்களைச் செய்யவும் நாம் தயார் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்
No comments:
Post a Comment