Saturday, April 2, 2022

மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தை, குறைக்குமாறு பிரதமர் அறிவுறுத்தல்


திட்டமிட்டபடி எரிபொருள் கையிருப்பு கிடைப்பதை கருத்திற்கொண்டு மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தை நாளை (03) முதல் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மின்சக்தி அமைச்சர் பவித்ராதேவி வன்னிஆராச்சி அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மின்சாரம் துண்டிக்கப்படும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளமையால், மக்கள் தமது அன்றாட வாழ்க்கையில் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை குறைக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டி பிரதமர் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கமைய (03) முதல் மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மின்சக்தி அமைச்சர் பவித்ராதேவி வன்னிஆராச்சி அவர்கள் கௌரவ பிரதமரிடம் நம்பிக்கை வெளியிட்டார்.

பிரதமர் ஊடக பிரிவு

No comments:

Post a Comment