Sunday, December 18, 2022

வர்த்தகர் கொலை தொடர்பில் சமுதித்தவிடம் விசாரணை


இலங்கையின் பிரபல காப்புறுதி நிறுவனத்தின் தலைவரான வர்த்தகர் தினேஷ் சாப்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொண்டதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் கொலை மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைப்பிரிவிற்கு இன்று அழைக்கப்பட்டிருந்த சமரவிக்ரமவிடம் சுமார் இரண்டரை மணிநேரம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.


வர்த்தகர் தினேஷ் சாப்டரின் கொலை சம்பந்தமாக சமுதித்த சமரவிக்ரம, சம்பவம் நடந்த தினத்திலேயே புலனாய்வு செய்தியாளரும் விமானப்படையின் முன்னாள் அதிகாரியுமான கீர்த்தி ரத்நாயக்கவுடன் இணையத்தள வலையெளியில் நடத்திய சுமார் 40 நிமிடம் ஓடக்கூடிய பேட்டியை அடிப்படையாக கொண்டு இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது எனவும் அந்த பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.  


இந்த பேட்டியின் போது கீர்த்தி ரத்நாயக்க, பொலிஸாரின் விசாரணை, கொலையுடன் சம்பந்தப்பட்ட நபர் என சந்தேகிக்கப்படும் நபர் தொடர்பிலும் தகவல்ளை வெளியிட்டிருந்தார். 


ஆங்கில கிரிக்கெட் வர்ணையாளர் ஒருவரிடம் தினேஷ் சாப்டர் உட்பட பலர் பல பில்லியன் ரூபா பணத்தை முதலீடு செய்திருந்தாகவும் முதலீடு செய்த அந்த பணம் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் கூறியிருந்தார்.  Tamilw

No comments:

Post a Comment